ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி நந்திதாவுக்கு தமிழில் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட்டானதால் எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என தொடர்ந்து மூன்று ஹிட் படங்களில் நடித்து பேசப்படும் நடிகை ஆனார். இருப்பினும் அதற்கடுத்து அவர் பெரிதாக எதிர்பார்த்த நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ஆகிய படங்கள் தோல்வியடைந்து விட்டன. அதனால் அடுத்தபடியாக மேல்தட்டு ஹீரோக்களுடன் நடித்தாக வேண்டும் என்கிற முயற்சியில் இருந்த அவருக்கு அந்த படங்களின் தோல்வி முட்டுக்கட்டை போட்டன.
இந்நிலையில், மீண்டும் விஜயசேதுபதியுடன் இடம் பொருள் ஏவல் பட வாய்ப்பு வந்தபோது உற்சாகமாக கமிட்டான நந்திதாவுக்கு, பின்னர் ராதாமோகனின் உப்புக்கருவாடு, விஜய்யின் புலி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்களில் இடம் பொருள் ஏவல் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம் நந்திதா. காரணம், அவரது திறமைக்கு தீனி போடும் பல காட்சிகளை கொடுத்துள்ளாராம் இயக்குனர் சீனு ராமசாமி. இதற்கெல்லாம் மேலாக, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் நாயகனாக விஜயசேதுபதியே இந்த படத்தின் நாயகன் என்பதால் இன்னும் உற்சாகமாக இருக்கிறார் நந்திதா. ஏற்கனவே அவருக்கு ஜோடியாக தான் நடித்த அந்த படம் ஹிட்டடித்தால் இந்த முறையும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். நந்திதாவின் இந்த விஜயசேதுபதி செண்டிமென்ட் ஒர்க்அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.