மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அஜீத்தைப் பொறுத்தவரை ஹீரோ பில்டப் சீன், பஞ்ச் டயலாக் என்பதில் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார். டைரக்டர்களே அவரை கால், கை என்று ஒவ்வொன்றாக ஓப்பன் செய்து முழுசாக காட்ட வேண்டும் என்று பில்டப் சீன் வைத்திருந்தாலும் இதெல்லாம் தேவையில்லை நார்மலாக ஓப்பன் பண்ணுங்கள் என்று கூறி விடுவார். அந்த வகையில், என்னை அறிந்தால் படத்தில் அஜீத்தை ஓப்பன் பண்ணும் காட்சியை ஏர்போர்ட்டில் பெரிய அளவில் பில்டப்புடன் படமாக்க திட்டமிட்டு வைத்திருந்த கெளதம்மேனனிடம், அஜீத் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிளைட்டில் அனுஷ்காவுக்கு அருகில் அமர்ந்து அவர் பயணம் செய்வது போல் அஜீத்தின் முதல் காட்சியை படமாக்கியிருந்தார்.
அதேமாதிரிதான் தற்போது அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்திலும் பெரிய பில்டப் எதுவும் இல்லையாம். அதேசமயம், தனது ரசிகர் கதை என்பதை கடந்து ரொமான்ஸ், ஆட்டம் பாட்டம் என்பதை அதிகமாக எதிர்பார்ப்பதால், பாடல் காட்சிகளில் மட்டுமே மற்ற நடிகர்களுக்கு இணையான பில்டப் கொடுத்து ஆட்டம் போட்டுள்ளாராம் அஜீத். அந்த வகையில், என்னை அறிந்தால் படத்தில் அத்தாரு அத்தாரு உத்தாரு உத்தாரு -என்று வரிந்துகட்டி ஆடிய அஜீத், இந்த வேதாளம் படத்தில் கெத்தை விடாதே உன் கெத்தை விடாதே -என்று தொடங்கும் ஒரு பாடலில் கெத்தான லோக்கல் ஆட்டம் போட்டுள்ளார். சமீபத்தில்தான் இந்த பாடலை படமாக்கியுள்ளனர். இந்த பாடலை அடுத்து வெளியாகும் வேதாளம் ட்ரெய்லரில் இணைக்க திட்டமிட்டுள்ளார் டைரக்டர் சிவா.