ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூது கவ்வும் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். மலையாளப்படத்தில் அறிமுகமான மடோனா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர சமுத்திரகனி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஒரு பிரபலமான கொரியன் படத்தை தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது அதற்கு காதலும் கடந்து போகும் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். “எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும்” என்பது பிரபலமான ஒரு வாக்கியம். அதிலிருந்து இந்த தலைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.