ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் ஜின். கலையரசன், மாயா, காளி வெங்கட், முனீஷ்காந்த், அர்ஜுனன் நடித்துள்ளனர். சதீஷ் சந்திரசேகர் இயக்கி உள்ளார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா வாங்கி வெளியிடுகிறார். அவர் படத்தின் பெயரை டார்லிங் 2 என்று மாற்றி விட்டார்.
நான்கு நண்பர்கள் ஒரு ரிசார்ட்சுக்கு புத்தாண்டு கொண்டாட செல்வார்கள். அங்கு அவர்களுக்கு கிடைக்கும் பேய் அனுபவம்தான் கதை. ஒரு வித்தியாசம் என்ன வென்றால் அந்த நான்கு நண்பர்களில் ஒருவர்தான் பேய். தான் பேய் என்பது அவருக்கே தெரியாது. இப்படி ஒரு கதையில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் மாயா.
மாயா ஒரு பல் டாக்டர். சின்ன வயதிலேயே நடிப்பு மீதுதான் அவருக்கு ஆர்வம். ஆனாலும் வீட்டில் எல்லோரும் படித்தவர்கள் என்பதால் பெற்றோர் ஆசைக்காக பல் டாக்டருக்கு படித்தார். தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வரும் மாயா. தன் நடிப்பு ஆசையை தீர்த்துக் கொள்ள டார்லிங் 2 படத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து நடிக்கவும் விருப்பம் கொண்டுள்ளார்.
"நடிப்புதான் என் கனவு. என்றாலும் பெற்றவர்களின் கனவை நனவாக்க டாக்டராகிவிட்டேன். டார்லிங் 2 படம் முடிந்து விட்டது மேலும் சில பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. டார்லிங் 2 வெளிவந்ததும் மற்ற படங்களில் நடிப்பேன். மக்கள் என்னை நடிகையாக ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிப்பேன் இல்லாவிட்டால் பல் மருத்துவராக வாழ்க்கையை தொடர்வேன்" என்கிறார் டாக்டர்.மாயா.