ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியைத் தொடர்ந்து அவரது மகன் நடிகர் ராம் சரண் மற்றும் அவரது உறவினர்களின் வாரிசுகளும் தெலுங்கு திரை படங்களில் நடித்து வருகின்றனர். டோலிவுட்டின் அதிரடி நாயகனான ராம் சரண் தற்போது ப்ரூஸ் லீ படத்தில் நடிக்கின்றார். இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் உருவாகும் ப்ரூஸ் லீ படத்தில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவுள்ளது. அதே போல் சிரஞ்சீவியின் தம்பியான நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜ் நாயகனாக நடிக்கும் கஞ்சே படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் காதலை மையப்படுத்திய கஞ்சே படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். மெகா ஸ்டார் ரசிகர்கள் இவ்விரு தகவல்களையும் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.