Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷா இல்லனா நயன்தாரா - விமர்சனமா ? எதிர்ப்பா ?

19 செப், 2015 - 16:48 IST
எழுத்தின் அளவு:
Trisha-Illana-Nayanthara---under-pressure

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் பற்றிய விமர்சனங்களும், எதிர்ப்பும் அதிகம் கிளம்பியுள்ளது. அதே சமயம் அந்தப் படம் அந்த விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மீறி வசூலைப் பெற்று வருவதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். அப்பா கஸ்தூரிராஜா இயக்கத்தில் மகன் தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை', எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அவரும் சிம்ரனும் நடித்து வெளிவந்த 'நியூ' ஆகிய படங்களுக்குப் பிறகு 'அந்த' அர்த்தத்தில் அதிகமான பேச்சை 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் படத்தின் டீசரும், டிரைலரும் வெளியான போதே பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. அதன் பின் பாடல்கள் வெளியான போது 'பிட்டு படம்டி, முத்தம் கொடுத்த மாயக்காரி' என்ற 'அந்த' அர்த்தம் இன்னும் அழுத்தமாகப் பதிந்தது. அதன் பின் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட போது, அது ஆமோதிக்கப்பட்டதாகவும் அமைந்தது. இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த இந்தப் படம் பற்றி பலத்த விமர்சனங்கள் ஒரு பக்கமும், எதிர்ப்புகள் மறுபக்கமும் எழுந்துள்ளன.


படத்தின் கதையும், காட்சிகளும், வசனங்களும் இரட்டை அர்த்தம் உள்ளதாகவும், சில காட்சிகள் ஆபாசமாக உள்ளதாகவும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், தியேட்டர்களில் இளைஞர்கள் படத்தைக் கொண்டாடுகிறார்கள், விசிலடித்தும், கை தட்டியும் ரசிக்கிறார்கள் என்றும் தியேட்டர்காரர்களே தெரிவிக்கிறார்கள். இந்த எதிர்மறை விமர்சனங்களும், கருத்துக்களும் படத்திற்கே பாசிட்டிவ்வாக அமைந்து இரண்டு நாளில் வசூலைக் குவிக்கிறது என்றும் சொல்கிறார்கள்.


போதாக் குறைக்கு இயக்குனரும், நாயகியும் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்றும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். படம் உருவாக்கத்தில் இருக்கும் போதே ஜி.வி.பிரகாஷ், படத்தின் நாயகியான மனிஷாவுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் 30 டேக் வாங்கினார் என்று கிளப்பி விட்டார்கள். வடிவேலு பாஷையில் சொல்வதென்றால் 'எதையும் பிளான் பண்ணி பண்ணணும்', என்ற அவர்களது 'பப்ளிசிட்டி ஸ்டன்ட்' படத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தி இன்று வசூலைக் கொடுக்கிறது. சினிமாவில் 'என்ட் ஆப்த டே' வசூல்தான் முக்கியம். இமேஜும், பெயரும், புகழும் யாருக்கு வேண்டும்.


இப்படிப்பட்ட ஒரு படத்தில் டைட்டிலில் நம் பெயர் வந்துவிட்டதே என்று த்ரிஷாவும், நயன்தாராவும் இப்போது கவலைப்படுவார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in