ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இளையராஜா இசையில் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும் படம் கிடா பூசாரி மகுடி. ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் தமிழ், நட்சத்திரா, சிங்கம்புலி, பவர்ஸ்டார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று முதலில் இளையராஜாவை அணுகியபோது மறுத்து விட்டாராம். அதேசமயம், படமாக்கிவிட்டு வாருங்கள் எனக்கு பிடித்திருந்தால் இசையமைத்து தருகிறேன் என்று சொன்னாராம். அதையடுத்து வசன காட்சிகளை படமாக்கி விட்டு அவரை அணுகியபோது கிராமத்து சூழலில் உருவான அப்படம் இளையராஜாவை கவர்ந்து விட இசையமைக்க சம்மதித்தாராம். பின்னர் மொத்த பாடல்களையும் பதிவு செய்து கொடுத்தவர், பின்னணிஇசைக்கோர்ப்பு வேலைகளையும் சில நாட்களில் முடித்துக்கொடுத்தாராம்.
இளையராஜா இசையமைத்ததால் கிடா பூசாரி மகுடி படத்தின் பலம் அதிகரித்துள்ளது. அதோடு நீண்ட நாளைக்குப்பிறகு இப்படத்தில் அவர் பின்னணியும் பாடியிருப்பதால், கிராமத்து கதைக்கு புதிய உயிரோட்டம் கிடைத்திருப்பதாக சொல்கிறார் அப்படத்தின் இயக்குனர் ஜெயக்குமார். மேலும், இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், புதுமுகங்கள் நடித்த படமென்பதால் விநியோகஸ்தர்கள் வாங்க முன்வராததால், படத்தை தயாரித்த நிறுவனமே ஓனாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாம். ஆனால் கடந்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட அப்படம் சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் பின்வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த மாதம் அல்லது அதற்கடுத்த மாதம் ரிலீசாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.