ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக அஜீத் போன்ற பிரபல நடிகர்களின் புகழ் பாடி படங்களை ஓட வைக்க பல நடிகர்கள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில், வாலு படத்தில் சிம்புவும், யட்சன் படத்தில் ஆர்யாவும் அஜீத் புகழ் பாடி நடித்தனர். அந்த படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது புகழ் பாடி நடித்ததற்காகவே அப்படங்களுக்கு ஒரு ஓப்பனிங் கிடைத்தது.
இந்த நிலையில், தற்போது விக்ரமும் தான் நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்தில் கமலை புகழ்ந்து ஒரு பாடலில் நடித்துள்ளாராம். ஹைவேயில் நடக்கும் பக்கா கமர்சியல் கதையில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் விக்ரம் ஆக்சன் கோதாவில் குதிக்கும் ஒவ்வொரு காட்சியிலுமே ஒரு பாடல் ஒலிக்குமாம். அதோடு ஒரு சண்டை காட்சி முழுக்க அவர் பாடிக்கொண்டேதான் எதிரிகளை துவம்சம் செய்கிறாராம்.
அதேபோல், பல உலக பிரபலங்களின் பெயர் இடம் பெறும் பாஸ்ட் பீட் பாடலில் கமல்ஹாசனின் புகழ் பாடியிருக்கிறாராம். கமல்ஹாசன் விக்ரமுக்கு பிடித்தமான நடிகர் என்பதோடு, அவர்கள் இருவருமே பரமக்குடிக்காரர்கள். அதனால் இந்த பாடலில் எந்த நடிகரின் பெயரை குறிப்பிடலாம் என்றபோது, கமல் சார் பெயரை எழுதுங்கள் என்று விக்ரமே கேட்டுக்கொண்டாராம்.