மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
12பி, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, அன்பே அன்பே, பாலா, லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஷாம். தமிழில் பிரபலமான நடிகர் என்றாலும், முன்னணி நடிகராக வர முடியவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் போன ஷாம், அங்கு கொஞ்சம் பிரபலமாகி கொண்டு இருக்கிறார். இப்போது மீண்டும் டைரக்டர் துரை படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி போன்ற வித்யாசமான கதையம்சம் உள்ள படங்களாக கொடுத்து சிறந்த டைரக்டராக தன்னை நிலைநிறுத்தி கொண்டவர் வி.இஜட்.துரை. படத்திற்கு படம் வித்யாமாக கொடுக்கும் துரை, இப்போது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார். படத்தின் தலைப்பையே வித்யாசமாக "6" என்று வைத்துள்ளார். இதில் ஹீரோவாக ஷாம் நடிக்கிறார். முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் மூன்று விதமான தோற்றத்தில் நடிக்கிறார் ஷாம். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஷாம். ஆனால் இடையில் தெலுங்கு படங்களில் அவர் பிஸியாக இருந்ததால், அவருக்காகவே காத்திருந்திருக்கிறார் துரை. விரைவில் இப்படத்திற்கான வேலைகள் துவங்கப்பட இருக்கிறது.
"6" படத்தின் மூலம் தமிழில் மீண்டும் தனக்கு நல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஷாம்.