ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல ஓவியர் ஸ்ரீதர். கமலஹாசனை மையமாக வைத்தே நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்தவர். அவர் தற்போது மைய்யம் என்ற படத்தை தயாரித்து, இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது ஸ்ரீதரின் 14 வயது மகள் வருணா ஸ்ரீதர்.
அப்பாவை போலவே ஓவியங்கள் வரைய ஆரம்பித்தவர் அதில் உயரத்துக்குச் சென்றார். யங்கஸ்ட் டிசைனர்-ன் ஆசியன் பசிபிக் ரீஜன் என்ற விருது வாங்கினார். அதன் பிறகு ஜெர்மன் உள்ளிட்ட பல உலக நாடுகளில் நடந்த ஓவிய போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றார்.
ஸ்ரீதர் மய்யம் படத்தை தொடங்கியதும் மகளை காஸ்ட்யூம் டிசைனாக்கினார். அதுவரை வருணா அந்த வேலை பார்த்ததில்லை. நீ உன் ஓவியங்களுக்கு அணிவிக்கும் ஆடையை என் கேரக்டர்களுக்கு வடிமைத்துக்கொடு என்று கூறியிருக்கிறர். உடனே அதை ஏற்றுக் கொண்டார்.
படம் ஆரம்பிப்பத்தற்கு முன்பு மய்யம் படத்தின் கேரக்டர்களை சின்ன பொம்மைகளாக செய்து அவற்றுக்கு விதவிதமான ஆடைகள் வரைந்து பார்த்து அதன் மூலம் கேரக்டர்களுக்கான ஆடைகளை முடிவு செய்து உருவாக்கியிருக்கிறார். படம் முடிவதற்குள் கைதேர்ந்த ஆடை வடிவமைப்பாளராகிவிட்டார். தமிழ் சினிமாவின் முதல் இளம் ஆடை வடிவமைப்பாளர் என்ற பெயரையும் வருணா பெற்றிருக்கிறார்.