ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்தவர் நந்திதா. பெங்களூர் நடிகையான இவருக்கு தமிழ்ப்படங்களில் நடிக்க வரும்போதே ஓரளவு தமிழ் தெரியும். அதனால்தான் அவரை டைரக்டர்கள் துணிந்து புக் பண்ணினர். அதோடு, இயல்பாக நடித்து கதாபாத்திரங்களில் எளிதாக ஒட்டிக்கொண்ட நந்திதா, இப்போது புலி படத்தில் விஜய்யுடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். அதோடு, ராதா மோகன் இயக்கி வரும் உப்புக்கருவாடு படத்தில் லீடு ரோலில் நடிக்கும் நந்திதா, இடம்பொருள் ஏவல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும், குறுகிய காலத்தில் தமிழில் பத்து படங்களுக்கு மேல் நடித்து விட்டதால் இப்போது சரளமாக தமிழ் பேசுகிறார் நந்திதா.