விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கோஹினூர் வைரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே.. அந்த 'கோஹினூர்' என்கிற பெயரிலேயே மலையாளத்தில் ஒரு படம் தயாராகியுள்ளது.. இந்திரஜித், ஆசிப் அலி இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஆசிப் அலியே தனது மகன் பெயரில் ஆரம்பித்துள்ள நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகரான ஆசிப் அலி, ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல், நான்கு ஹீரோக்களில் ஒருவராக் நடிக்க அழைத்தாலும் தயங்காமல் ஒப்புக்கொள்ள்ளக்கூடியவர்.
அவ்வளவு ஏன்.. யார் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தாலும் மறுப்புச்சொல்லாமல் நடித்துக்கொடுப்பார். ஒரு சில இயக்குனர்கள் உங்களுக்கு முக்கியமான கேரக்டர் சார் என்று சொல்லி நான்கு சீன்கள் வருமாறு காட்சிகளை வைத்து அனுப்புவார்கள்.. இட்ஸ் ஒகே பாஸ் என கைகுலுக்கிவிட்டு வருவார். அப்படிப்பட்ட ஆசிப் அலியின் குணம் அறிந்த மம்முட்டி, 'கோஹினூர்' படத்தின் ஆடியோ ரிலீஸில் கலந்துகொள்ள தன்னை அழைத்ததும் தவறாமல் சென்று கலந்துகொண்டு விழாவை சிறப்பித்துள்ளார்.