பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
புதுயுகம் சேனல் இந்த மாதத்திலிருந்து 3 புதிய தொடர்களை ஒளிபரப்புகிறது. அதில் ஒன்று விக்ரமாதித்தனின் சிம்மாசனம். இது மன்னர் விக்ரமாதித்தன் வரலாற்று கற்பனை கதை. விக்ரமாதித்தன் மந்திர சிம்மாசனத்தை அடைய அழகிகள் போடும் 32 புதிர்களை விடுவிக்கும் கதை. மாயாஜாலம், ரொமான்ஸ் கலந்த கதை. திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறு ஒளிபரப்பு பகல் 11 மணி.
அடுத்து ரிப்போர்ட்டர் என்ற தொடர். ஒரு ரிப்போர்ட்டரின் வாழ்க்கையில் வரும் சம்பவங்களை கொண்ட தொடர். ஆக்ஷன், த்ரிலுடன் ரிப்போர்ட்டரின் அன்றாட பணிகளில் சந்திக்கும் சவால்கள். போட்டிகளை சமாளிக்கும் விதம் என பரபரப்பான கதை. சக பெண் ரிப்போர்ட்டருன் காதல் சமாச்சாரங்களும் உண்டு. இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறுஒளிபரப்பு பகல் 12.30 மணிக்கு
மூன்றாவது நிகழ்ச்சி திக் திக் திகில், ஹாலிவுட் திகில் படங்களின் பாணியில் ரத்தக்காட்டேறிகள், பேய்களின் கதை. பேய் வேட்டைக்காரர்களின் சாகசத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் கதைகள். அனிமேஷன், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் உதவியுடன் திகிலூட்டும் தொடர். ஒவ்வொரு கதையும் இரண்டு அல்லது மூன்று எபிசோட்களை கொண்டதாக இருக்கும். சவுண்ட் எபெக்ட் தனியாக கேட்கும். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பகல் 12 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.
இந்த மூன்று நிகழ்ச்சிகளும் கடந்த 7ந் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கியிருக்கிறது. மூன்றுமே டப்பிங் தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.