விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மலையாள சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைப்பதற்கு தகுதியான, மலையாளிகள் அனைவராலும் மம்முக்கா என செல்லமாக அழைக்கப்படுகின்ற மெகாஸ்டார் மம்முட்டி இன்று தனது 65வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 1970களின் ஆரம்பத்திலேயே சினிமாவில் அடியெடுத்து வைத்த மம்முட்டி, மலையாள சினிமாவின் பிதாமகன் என்று சொல்லப்படும் இயக்குனர் எம்.டி.வாசுதேவ நாயரின் அரவணைப்பில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்டார். சிறியதோ, பெரியதோ இரண்டு மூன்று ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பதோ எதுவானாலும் மறுப்பு சொல்லாமல் ஒப்புக்கொண்ட மம்முட்டி, இந்த நாற்பதாண்டு கால சினிமா வாழ்க்கையில் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.
புதிய இயக்குனர்கள் சினிமாவிற்குள் வர ஆதரவுக்கரம் நீட்டுவதோடு, தன்னை வைத்து படம் இயக்கி, தற்போது ரேஸில் பின்தங்கிவிட்ட சீனியர் இயக்குனர்களையும் மறவாமல் மீண்டும் அழைத்து படம் தருவதிலும் மம்முட்டிக்கு நிகர் அவரே தான்.. நடிகராக மட்டுமின்றி மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்திலும் மம்முட்டி ஒரு உதாரண புருஷன்தான். தான் நிர்வகித்துவரும் பதஞ்சலி மருத்துவமனை மூலம் விபத்து, பூகம்பம் போன்ற சமயங்களில் லட்சக்கணக்கான மதிப்புள்ள மருந்துகளை இலவசமாக கொடுத்து பல உயிர்களை காத்தவர்.. வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என நினைக்கும் மம்முட்டியின் பிறந்தநாளுக்கு மோகன்லால் உட்பட மலையாள திரையுலக பிரமுகர்கள் அனைவரும் தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.