Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அஜித் சமைக்கும் மீன்கறி; ஆசைப்படும் ஸ்ருதி

07 செப், 2015 - 01:25 IST
எழுத்தின் அளவு:
Shruthi-haasan-interview-to-dinamalar

நடிகர் கமல் ஹாசனின் வாரிசு; இசை, பாட்டு, நடனம், நடிப்பு என, தனக்கே உரிய ஸ்டைலில், ரசிகர்களை துாங்கவிடாமல் துரத்துபவர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடிப்பதால், 'பிசி'யாக இருக்கும், நடிகை ஸ்ருதியின், 'ஸ்வீட்' பேட்டி:

* உங்க சினிமா, 'கேரியர்' எப்படி இருக்கு?
ரொம்ப உற்சாகமான நேரம் எனக்கு. விஜய் சாருடன், 'புலி' படம் முடிச்சிருக்கேன்; எனக்கு பிடித்த கேரக்டர். அஜித் சாருடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. விரைவில் சூரியாவுடன், 'சிங்கம் 3'ல் நடிக்கப் போகிறேன்; ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

* அஜித், சூர்யா, விஜயுடன் நடித்த அனுபவம் எப்படி?
கடந்த, 2011ல், 'ஏழாம் அறிவு' படத்தில் நடித்து, தமிழில் சினிமா பயணத்தை தொடங்கினேன். என்னுடைய கடினமான உழைப்பால், இந்த பிரபலமான நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர்களிடம், நிறைய சினிமா விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது நல்ல அனுபவம்.

* இந்தியில் ரொம்ப கிளாமர்...; தெலுங்கில் கொஞ்சம் கிளாமர்; தமிழில், ஏன் இப்படி...?; பாவம் தமிழ் ரசிகர்களாச்சே?

இதுவரை, கிளாமர் என்பதற்கான அர்த்தம் எனக்கு புரியவில்லை. எது கிளாமர்; எதுவரை கிளாமர் என்றும் தெரியாது. நான் நடித்த இந்தி படம், 'ரம்பயா வஸ்தாவைய்யா', பிரபுதேவா இயக்கியது. 'நுவ்வஸ்தானன்ட்டே' பட ரீமேக். அதைவிட ஹோம்லியான கேரக்டர், தமிழில் அல்லது தெலுங்கில் இதுவரை பண்ணல; இதுக்கு என்ன சொல்வீர்கள். கதை தான் அனைத்தையும் முடிவு செய்கிறது.

* அப்பா, அம்மாவிடம் கற்றுக்கொள்ள விரும்புவது?
அப்பாகிட்ட, நேரம் தவறாமை, எடுத்த விஷயத்தில் உறுதியாக இருப்பது மற்றும் மன வலிமை பிடிக்கும். அம்மா, குழந்தையில் இருந்து நடிக்கிறாங்க; பல போராட்டங்களை சந்திச்சிருக்காங்க. அவங்களது பொறுமை எனக்கு பிடிக்கும்; இதையெல்லாம், கற்றுக் கொள்ள ஆசை.

* அஜித் உங்களை போட்டோ எடுத்தது பற்றி?
ஷூட்டிங்கின் இடைவெளியில் கேமராவுடன் இருப்பார். எப்போதும் போல், போட்டோ எடுப்பார் என நினைத்தேன். ஆனால், அழகா, அற்புதமா எடுப்பார்னு நினைக்கல; எனக்கே ஆச்சர்யம் தந்தார்.

* நீங்க ஒரு படத்தில் நடிக்க, பணத்தை அல்லது கதையை அல்லது ஹீரோ யார்னு பார்ப்பீங்களா?
எனக்கு, முதலில் கதை அவசியம்; இயக்குனர் யாருன்னும் பார்ப்பேன்; அடுத்து தயாரிப்பு கம்பெனியை பார்ப்பேன். பணம் முக்கியம் தான். எல்லா படத்துக்கும் அப்படி சொல்ல முடியாது; பொருந்தாது.

* அப்போ கதை நன்றாக இருந்து, உங்களுக்கு குறைவாக சம்பளம் கொடுப்பதாக சொன்னால், ஒப்புக் கொள்வீர்களா?
கண்டிப்பா நடிக்க ஒத்துக்குவேன்; ஒன்றிரண்டு படங்களை, அப்படி நடித்தும் கொடுத்திருக்கேன்.

* நீங்க எல்லார்கிட்டேயும், 'அட்ஜஸ்ட்' பண்ணி போவீங்களா அல்லது அடுத்தவங்களை, அட்ஜஸ்ட் பண்ண வைப்பீங்களா?
சூழ்நிலையை பொறுத்து, அட்ஜஸ்ட் பண்ணி போகனும்னு நினைக்கிறேன்.

*சினிமாவில் நடிக்க நீங்களா விரும்பி வந்தீங்களா?
நான், தப்பித்தவறி தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். எனக்கு முதலில் படம் இயக்குவது மற்றும் இசையமைப்பதில் தான் ஆர்வம் இருந்தது. என் சிறு வயது நண்பர் இம்ரான் கான், 'லக்' என்ற ஒரு படம் தயாரித்தார்; நல்ல, 'ஆக் ஷன் ஸ்கிரிப்ட்', நீ நடிக்கிறீயா என, கேட்டார். சரி முயற்சி பண்ணி பார்க்கிறேனு சொல்லி நடிச்சேன். அந்த படத்திற்குப் பின் தான், நிலைமை மாறியது. இப்போது, முழுநேர நடிகையாகிவிட்டேன்.

* தனுஷ் உடன் நடித்த, 3 படத்தின் கொலவெறி பாட்டை உலகமே பேசியது. ஆனால், படம் சரியாக போகவில்லை; அந்த வருத்தம் உங்களுக்கு இதுவரை இருக்கா?
சில படங்கள் நல்லா போகும்; சில படங்கள் கொஞ்சம் சுமாராக போகும். ஆனால், அந்த படம் ரசிகர்கள் மனதில் ஒரு அழுத்தத்தை கொடுத்திருக்கும். என் அப்பா நடிப்பில், நிறைய படங்கள் பெரிய, 'ஹிட்' ஆகியிருக்கு. சில படங்கள் சரியா போகல. ஆனால் இப்போது வரை, ரசிகர்கள் அந்த படங்களை பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. அந்த மாதிரி தான், 3 படமும்; எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. ஒரு நடிகையா என்னோட, 'பெஸ்ட்' நடிப்பை கொடுத்திருக்கிறேன்.

* சமையலறை பக்கம் போவது உண்டா?
அந்த அளவுக்கு நேரம் கிடைக்காது. ஆனால், சமையல் செய்யும் ஆர்வம் உண்டு. மும்பை வீட்டில், சாம்பார், உருளைக்கிழங்கு பொறியல் நன்றாக செய்வேன்; என், 'ப்ரண்ட்ஸ்' வந்து சாப்பிடுவாங்க. ஆனால், அஜித் சார் சமையலை, நான் விரும்பி சாப்பிடுவேன். அவர், மீன்கறி நல்லா சமைப்பார்; அதை சாப்பிட எனக்கு ஆசை. நேரம் கிடைக்கும் போது, அவர் கிட்ட சமையல், 'டிப்ஸ்' வாங்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன்.

* உங்களுக்கு போட்டி யாருன்னு நினைக்கிறீங்க?
நான் யாரையும் போட்டியாக நினைக்கமாட்டேன்; எனக்கு நான் தான் சரியான போட்டி. என்னோட கடைசி படத்தை விட, அடுத்த படத்தை இன்னும் எப்படி சிறப்பா கொடுக்கலாமுன்னு நினைச்சு, அதை சவாலா எடுத்துக்கிட்டு நடிக்கிறேன்.

* நிறைய புதுமுகங்கள் வந்திட்டு இருக்காங்களே? அவர்களுக்கு சொல்ல விரும்புவது?
தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம்; உங்க பலம் என்ன, பலவீனம் என்னன்னு உணர்ந்து, அதன்படி போனால் கண்டிப்பாக முன்னேறலாம். 'லக்' என்பதை விட, உழைப்பு ரொம்ப முக்கியம். உங்க பயணம் முடியும் வரை, பாதை மாறாமல் போனால் கண்டிப்பாக ஜெயிக்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in