சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்ய உள்ளார். சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்தார்.
சில, பல மாதங்களுக்கு முன்னர் நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை யாரும் மறந்திருக்க மாட்டார். வடிவேலு வீட்டின் மீது கல்லை எறிந்து பெரும் ரகளை செய்தனர் தே.மு.தி.க.,வினர். இதனால் கொதித்து போன வடிவேலு வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து நானே போட்டியிட்டு அவரை தோற்கடிப்பேன் என்று ஆவசேமாக கூறியிருந்தார். இப்போது தேர்தலும் வந்துவிட்டது. வடிவேலு, விஜயகாந்த்தை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வடிவேலு இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தி.மு.க.,வுக்கு அதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று(21.03.11) சந்தித்து பேசினார் வடிவேலு. வருகிற 23ம் தேதி முதல் தனது பிரச்சார பயணத்தை தொடங்கும் வடிவேலும் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க இருக்கிறார்.