ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் தற்போது இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் ப்ரூஸ் லீ படத்தில் நடித்து வருகின்றார்.ஸ்டன்ட் கலைஞராக ராம் சரண் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். மெகா ஸ்டார் நடிகரும் ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி ப்ரூஸ் லீ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். அக்டோபரில் திரைக்கு வரும் இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெறுகின்றன. இப்படத்திற்கு பின்னர் ராம் சரண் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் ரவி தேஜா நடிப்பில் அண்மையில் வெளிவந்த கிக் 2 படத்தை இயக்கிய இயக்குநர் சுரேந்தர் ரெட்டி ராம் சரணின் அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து அவரிடம் சம்மதம் வாங்கியுள்ளார். கிக் 2 படம் தோல்வியைச் சந்தித்ததால் தனது அடுத்த படத்தை மிகுந்த கவனத்துடன் உருவாக்க இயக்குநர் சுரேந்தர் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.