Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரசாந்திடம் பாராட்டு பெற்ற கேமராமேன் எஸ்.சக்திவேல்!

05 செப், 2015 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Prashanth-praises-camera-man-Shaktivel

பிரசாந்த் நடித்த மலையூர் மம்பட்டியான் படத்தில் இடம்பெற்ற புரோமோ சாங்கான காட்டுவழிப் போற பெண்ணே கவலைப்படாதே -என்ற பாடலை ஒளிப்பதிவு செய்தவர் கேமராமேன் எஸ்.சக்திவேல். அந்த படம் வெளியான நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட இவரை, பிரசாந்தும் வெகுவாக பாராட்டினார். அதை யடுத்து செம ரகளை உள்பட சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அவர், 500க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது பாக்யராஜ்-பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் அய்யனார் வீதி என்ற படத்துக்கும் இவர்தான் கேமராமேன்.


இந்த படத்தில் தான் பணியாற்றியிருப்பதை பற்றி சக்திவேல் கூறுகையில், இந்த அய்யனார் வீதி படத்தை சிப்சி ராஜ்குமார் இயக்குகிறார். கே.பாக்யராஜ், பொன்வண்ணன், சாட்டை யுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராமத்து கதையில் உருவாகும் இந்த படத்தில் இயற்கை காட்சிகளை ரசிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறேன். குறிப்பாக, ராஜபாளையம் அருகில் சொக்கம்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறேன். 20 அடி உயரத்தில் அய்யனார் செட் போடப்பட்டு, அய்யனார் வேட்டைக்கு செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. சுமார் 5 லட்சம் மக்கள் அந்த திருவிழாவில் கூடிய நாளில் இந்த காட்சியை நாங்கள் தத்ரூபமாக படமாக்கினோம். மிகுந்த சிரமத்திற்கிடையேயும் சிறப்பாக படமாக்கினோம். அதனால் இந்த படம் தமிழ் சினிமாவில் எனக்கு நல்லதொரு திருப்புமுனை படமாக அமையும் என்று தான் எதிர்பார்ப்பதாக சொல்கிறார் கேமராமேன் சக்திவேல்.


ஒளிப்பதிவாளர் விஜய்மில்டனிடத்தில் உதவி கேமராமேனாக பல படங்களில் பணியாற்றியுள்ள இந்த சக்திவேல், கேமராமேன் மதி ஒளிப்பதிவு செய்த ராஜபாட்டை, சைத்தான் (இந்தி), மெர்சி (தெலுங்கு) போன்ற படங்களில் அசோசியேட் கேமராமேனாகவும் பணியாற்றியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in