ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜில்லாவுக்கு பிறகு சரியான படவாய்ப்புகள் இல்லாமல் ஆந்திராவில் முகாமிட்டிருந்த காஜல்அகர்வால், தனுசுடன் மாரி படவாய்ப்பு கிடைத்ததும் உற்சாகமானார். ஏற்கனவே அவருடன் ஒருமுறை நடிக்கயிருந்தது கைநழுவிப்போன நிலையில், இந்த முறை அவருடன் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றி விட்டேன். அதனால், கோலிவுட் மார்க்கெட்டிலும் விட்ட இடத்தை பிடித்து விடுவேன் என்று அதிக நம்பிக்கையுடன் நடித்தார் காஜல். ஆனால், மாரி காஜலை ரொம்பவே ஏமாற்றி விட்டது.
இருப்பினும் அவரது கைவசம் பாயும்புலி, மர்மமனிதன் உள்பட சில முன்னணி ஹீரோக்களின் படங்கள் இருந்ததால் அது காஜலை பெரிதாக பாதிக்கவில்லை. இந்த படங்களில் ஏதேனும் ஒன்று வெற்றி பெற்றாலும் டாப் கியரில் சென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் நடித்து வந்தார். அந்த வகையில், தற்போது விஷாலுடன் அவர் நடித்துள்ள பாயும் புலி படம் விரைவி்ல வெளியாக உள்ளது.