விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
டோலிவுட்டில் பிரபல நடிகர் நாகார்ஜுனா நேற்று(ஆகஸ்ட் 29) தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் உற்சாகமாகக் கொண்டாடினார். நாகார்ஜூனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் சைகோ திரில்லர் படமான சொக்கடே சின்னி நயன படத்தின் டீசர் மற்றும் அவரது மகன்கள் நாக சைதன்யா மற்றும் அகில் நடித்து வரும் படங்களின் டீசரும் நேற்று வெளிவந்தது.
இந்த மூன்று டீசரிலும் நாகார்ஜுனா படத்தின் டீசருக்கே ரசிகர்கள் அதிக அதரவு தந்துள்ளனர். சொக்கடே சின்னி நயன படத்தின் டீசரில் அசத்தலாகவும் ஸ்டைலாகவும் தோன்றிய நாகார்ஜூனாவே ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார். நடிகர் நாக சைதன்யா இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பான சாஹாசம் ஸ்வஷக சாகிபோ படத்தின் டீசர் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது.
நடிகர் அகில், இயக்குநர் விவி விநாயக் இயக்கத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள படத்தின் டீசரும் நேற்று வெளிவந்தது. தரையில்,தண்ணீரில்,ஆகாயத்தில் என சுழன்று சுழன்று அகில் அதிரடியாக டீசரில் தோன்றியுள்ளார். ஆக்ஷன் காட்சிகள் தவிர காதல் காட்சிகளோ,அகிலின் வசன உச்சரிபுகளோ இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.