ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா தற்போது தனது 99வது திரைப்படமான டிகேட்டரில் ஆர்வமுடன் நடித்து வருகின்றார். அதிரடி நாயகனாக அதிகம் அறியப்பட்ட பாலகிருஷ்ணா அதுபோல் இல்லாமல் ஸ்டைலாக ஹீரோவாக இப்படத்தில் நடிக்கின்றார். ஈரோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீவாஸ் இப்படத்தை இயக்குகின்றார்.இப்படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் நடிகை சோனல் சவுகான் நாயகிகளாக நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் துவங்கிய இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. இதில் பாலகிருஷ்ணா அஞ்சலி மற்றும் சோனலுடன் ஆடும் டூயட் பாடலின் படப்பிடிப்பு தற்போது நடைபெறுவதாக படக்குழுவினர் கூறுகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். துள்ளலான இசையுடன் உருவாகியுள்ள இப்பாடலின் படப்பிடிப்பு பல்கேரியாவில் படமாக்கப்படுகின்றது.