ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்த அஜித்குமார், தலயாக வளர்ந்த பிறகு அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பொது இடங்களில் நடைபெறுவதில்லை.
பெரும்பாலும் ஸ்டுடியோக்களிலும், அல்லது பின்னி மில் போன்ற தனியார் இடங்களிலும் அல்லது வேறு மாநிலங்களில்தான் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்கு அஜித் தற்போது நடித்து வரும் தல 56 படமும் விதிவிலக்கில்லை என்றே சொல்லப்பட்டது. வீரம்' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தல 56 படத்தின் படப்பிடிப்பு தனியார் காலேஜில் தொடங்கியது. பிறகு கொல்கத்தாவில் நடந்தது. பின்னர் இத்தாலியில் படப்பிடிப்பு நடைபெற்றது. அஜித்துக்கு தங்கையாக லக்ஷ்மிமேனனும், அஜித்தின் ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கும் இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்புதான் மக்கள் நடமாடும் இடங்களில் நடைபெறுகிறது. தல 56 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு சில நாட்களாக சென்னை அண்ணாசாலையிலுள்ள ரெமி மாலில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வில்லன்களில் ஒருவரான பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் அஜித்துடன் மோதுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா இந்த சண்டைக்காட்சிகளை படமாக்கி வருகிறார். தல 56 படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியாகிறது.