ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முதன் முறையாக நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்த ஸ்ரீமந்துடு படம் நேர்மறையான விமர்சனங்களுடன் வசூலில் சாதனை படைத்து வருகின்றது. வெளிவந்து மூன்று வாரங்கள் ஆன போதிலும் இப்படத்திற்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறையவில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். ஸ்ரீமந்துடு படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து டோலிவுட்டில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து விட்டது. அமெரிக்காவில் வழக்கத்தை விட அதிக திரையரங்குகளில் வெளியான ஸ்ரீமந்துடு படம் அங்கும் வசூலை வாரி குவிக்கின்றது. அமெரிக்காவில் 2015 ஆம் ஆண்டில் வசூலில் சாதனை படைத்த வெளிநாட்டு படங்களில் ஸ்ரீமந்துடு படம் 12வது இடத்தை பெற்றுள்ளது. இத்தகவல் அறிந்த படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.சமூக சிந்தனையுடன் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவில்லாமலும் இப்படத்தை இயக்குநர் கொரடலா சிவா இயக்கியிருந்தார்.