Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை டப்பிங் பேச விடவில்லை! ஜெய்குஹெய்னி பீலிங்ஸ்!!

22 ஆக, 2015 - 11:13 IST
எழுத்தின் அளவு:
Jai-hukeni-feels-about-that-she-did-not-speak-dubbing

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய 'ஆரோகணம்' படத்தில் லீடு ரோலில் நடித்த விஜியின் மகளாக நடித்தவர் ஜெய் குஹெய்னி. அதன்பிறகு சார்லஸ் ஷபி கார்த்திகா என்ற படத்தில் நடித்தவர் இப்போது மய்யம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். முந்தைய படங்கள் எதுவும் தனக்கு பெரிதாக ஒர்க்அவுட்டாகவில்லை என்ற நிலையில், இந்த மய்யம் படம் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா வட்டாரங்களிலும் தன்னை பேச வைக்கும் என்று எதிர்பார்க்கிறார் ஜெய் குஹெய்னி.


ஆனால் அப்படி அவர் பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த படத்தில் ஜெய் குஹெய்னியை டப்பிங் பேச வைக்கவில்லையாம். தனக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்த அவரை கடைசியில் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. படம் பார்க்க வாருங்கள் என்றுதான் அழைத்தார்களாம். இதனால் பலத்த அதிர்ச்சியடைந்து விட்டாராம் ஜெய்குஹெய்னி.


அதையடுத்து, என்னை டப்பிங் பேசவே அழைக்கவில்லையே? என்று கேட்டபோது, இந்த படத்தில் உங்களை தவிர நடித்திருக்கும் அனைவருமே புதியவர்கள். அதனால் அவர்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டை வைத்து பேசியது போன்று உங்களது கேரக்டருக்கும் ஒரு பெரிய டப்பிங் ஆர்ட்டிஸ்டை வைத்து பேசிவிட்டோம். ரிஸ்க் வேண்டாம் என்பதற்காகத்தான் இப்படி செய்தோம் என்று கூறினார்களாம்.


அதனால்,இதுவரை நடித்த படங்களுக்கெல்லாம் தனக்குத்தானே டப்பிங் பேசியிருக்கும் நிலையில், இந்த படத்தில் வேறு குரல் தனக்காக பேசியிருப்பதால், தனக்கான அடையாளம் போய் விடுமே என்று பீல் பண்ணினாராம் ஜெய்குஹெய்னி. இருப்பினும், இனிமேல் தான் நடிக்கப்போகும் படங்களில் நடிப்பதற்கு முன்பே, எனக்கான டப்பிங்கை நானேதான் பேசுவேன் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிபடுத்திய பிறகே நடிக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in