மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இஞ்சிஇடுப்பழகி படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செகன்ட்லுக், தேர்ட்லுக் என வரிசையாக அப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தவிர அப்படத்தின் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றன. அதைப் பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சர்யம் பாதி அதிர்ச்சி பாதி என கலவையான உணர்வுகள்.
காரணம்... அப்படத்தில் உள்ள அனுஷ்காவின் தோற்றம்! குண்டான பெண்ணைப் பற்றி கதை என்பதால் வழக்கத்தை சற்றே உடல் எடையைக் கூட்டி நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இஞ்சிஇடுப்பழகி போஸ்டரில் அனுஷ்காவைப் பார்த்தால் ஏறக்குறைய பழைய பிந்துகோஷ் சைஸுக்கு இருக்கிறார். அதை வைத்து இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா போட்ட வெயிட் என்று கதைவிடுகின்றனர். உண்மையில் குண்டு அனுஷ்கா நிஜமல்ல, அங்கிள்பன் படத்தில் மோகன்லால் குண்டாக நடித்ததைப்போல், நட்டி புரபொசர் படத்தில் எடி மர்ஃபி குண்டாக நடித்ததைப்போன்ற டெக்னிக்கில்தான் இஞ்சி இடுப்பழகி படத்திலும் அனுஷ்கா குண்டாக நடிக்கிறார்.
இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல், உண்மையிலேயே அனுஷ்கா குண்டுபூசணிக்காயாக நடிப்பதுபோல் பில்ட்அப் பண்ணி வருகின்றனர்.
பாவம் ரசிகர்கள்..!