சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
வசந்த் இயக்கத்தில் விஜய் நடித்த நேருக்கு நேர் என்ற படத்தில்தான் சூர்யா அறிமுகமானார். அந்த படத்தில் விஜய்யும், சூர்யாவும் எதிரும் புதிருமான வேடத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து அதே விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்திலும் எதிரும் புதிருமான வேடத்தில்தான் நடித்தார் சூர்யா. பின்னர் ஆறு, அஞ்சான் போன்ற படங்களில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்தார். ஆனால் எந்த படத்திலும் இதுவரை அவர் வில்லனாக நடிக்கவில்லை.
ஆனால், தற்போது விக்ரம்குமார் இயக்கத்தில் நடித்துள்ள 24 படத்தில் முதன்முறையாக வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார் சூர்யா. கதைப்படி இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் சூர்யா. இதில் ஒன்று அதிரடியான வில்லன் வேடமாம். மற்ற இரண்டு பாசிட்டிவ் வேடங்களை விடவும் இந்த வில்லன் வேடத்துக்காகத்தான் தனது பாடிலாங்குவேஜை மாற்றி நிறைய மெனக்கெட்டுள்ளாராம் சூர்யா.