ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகில் 'இரண்டாம் உலகம்' படத்தின் தோல்விக்குப் பிறகு சிறிய இடைவெளியை விட்டு தற்போது மூன்று படங்களைத் தயாரித்து வரும் பட நிறுவவனம் பிவிபி சினிமாஸ். 'இஞ்சி இடுப்பழகி, பெங்களூரு டேய்ஸ் ரீமேக், நாகார்ஜுனா, கார்த்தி ஆகியோர் நடிக்கும் படம்' என மூன்று படங்களைத் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது. மிகப் பெரும் நிறுவனமாக பிவிபி சினிமாஸ் விளங்கினாலும் அவர்களிடமிருந்து இதுவரை எந்த ஒரு பணத்தையும் பெற்றுக் கொள்ளாமல் 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் அனுஷ்கா நடித்துக் கொடுத்திருக்கிறாராம்.
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'இரண்டாம் உலகம்' படத்தின் தோல்வியால் வியாபார ரீதியாக பல கோடி ரூபாய் அந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரிக்கட்டவே ஆர்யாவும் அனுஷ்காவும் இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துக் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்காக இதுவரை தனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று அனுஷ்கு வாயைத் திறந்து கேட்கவேயில்லையாம். அதிலும் இந்தப் படத்தில் உடல் எடையைக் கூட்டி குண்டாக நடிப்பதற்காக நிறைய சாப்பிட்டும், உடற்பயிற்சி செய்தும் நிறைய செலவு செய்து தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.