ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வில்லன்களில் இரண்டாம் நிலை வில்லன் என்கிற ஒரு பிரிவு எல்லா மொழிப்படங்களிலும் இருக்கிறது.. இவர்கள் பெரும்பாலும் மெயின் வில்லனாக நடிக்க மாட்டார்கள்.. ஆனால் மெயின் வில்லனுக்கு துணையாக படம் முழுவதும் வரும் சைடு வில்லனாக நடித்திருப்பார்கள்.. அப்படி ஒரு மினி வில்லன் நடிகர் தான் மலையாள நடிகரான அபுசலீம். தமிழ்சினிமா ரசிகர்கள் விக்ரம் நடித்த 'மஜா' படத்தில் வில்லன் பிஜூமேனனின் அடியாளாக வரும் இவரை பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
இப்போது ரஞ்சித் டைரக்சனில் உருவாகியுள்ள 'லோஹம்' படத்தில் மோகன்லாலின் வலது கையாக பாசிட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். இது ஆக்சன் படம் இல்லை என்று ரஞ்சித்தும் மோகன்லாலும் மழுப்பலாக பேசி வந்தாலும், இது ஒரு நான்ஸ்டாப் ஆக்சன் படம் என உண்மையை போட்டு உடைக்கிறார் அபுசலீம்.. இந்தப்படத்திற்காக இவரை பிரெஞ்சு டைப்பில் தாடி வளர்க்கச்சொன்ன இயக்குனர் ரஞ்சித், தலையை மொட்டையடிக்க சொல்லிவிட்டாராம். கிட்டத்த ஹாலிவுட் பட ராக் போல ஆகிவிட்டேன் என்கிறார் அபுசலீம்.