ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதில் சரத்குமார் அணி, விஷால் அணி என இரு பிரிவினர் தேர்தலில் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நடிகர் சங்கம் இருந்த இடத்தை தரை மட்டமாக்கி அந்த இடத்தில் புதிய கட்டிடத்தையும் கட்டாமல், தியேட்டர் ஒன்றிற்கு குறைந்த விலையில் ஒப்பந்தம் போடப்பட்டதை விஷால் அணியினர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். அந்தப் பிரச்சனையால்தான் இளம் நடிகர்கள் அனைவரும் நாசரை முன்னிறுத்தி தேர்தலில் குதித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்டோர் ரஜினிகாந்தையும், கமல்ஹாசனையும் அடுத்தடுத்து சந்தித்து அவர்களது அணிக்கு ஆதரவு கோரினர். இதையடுத்து நடிகர் சங்கத் தேர்தல் களம் சூடுபிடித்தது. ரஜினியும், கமல்ஹாசனும் விஷால் குழுவினரிடம் நீண்ட நேரம் நடிகர் சங்கத்தைப் பற்றி விவாதித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதனிடையே சிம்பு, தனுஷ் உள்ளிட்ட மற்ற சில இளம் நடிகர்கள் சரத்குமார் அணிக்கே ஆதரவு தர உள்ளனர் என்று செய்திகள் வெளியாகின. இப்போது சிம்பு, சரத்குமார் அணிக்கே தன்னுடைய ஆதரவு என நேற்று நடைபெற்ற 'வாலு' சக்சஸ் மீட்டில் வெளிப்படையாக அறிவித்துள்ளார். “நான் விஜயகாந்த் அவர்கள் தலைவராக இருந்த காலத்திலிருந்தே நடிகர் சங்கத்தின் கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறேன். எதிர்பாராத விதமாக இரு அணி உருவாகி தேர்தலில் போட்டியிட உள்ளார்கள். இந்தத் தேர்தலிலும் எந்தப் போட்டியும் இல்லாமல் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன,” என்றார். அப்போது நிருபர் ஒருவர் உங்களது ஆதரவு எந்த அணிக்கு என்று கேட்டதற்கு 'சரத்குமார் அணிக்கு ஆதரவாகத்தான் நான் இருக்கிறேன்,” என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.