ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றுவரை கதாநாயகன் என்கிற அந்தஸ்தில் இருந்து ஒரு மாற்றுக்கூட குறையாத மலையாள மெகாஸ்டார் மம்முட்டி, வரும் செப்-7ஆம் தேதி தனது 65வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.. அன்றைய தினம் மம்முட்டி ஷூட்டிங் செல்கிறாரா அல்லது குடும்பத்துடன் கழிக்கிறாரா இல்லை ரசிகர்களை சந்திகிறாரா என்பதெல்லாம் இப்போது வரை மம்முட்டிக்கே தெரியாத விஷயங்கள். ஆனால் அவரது ரசிகர்கள் இந்தமுறை மம்முட்டியின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்துள்ளார்கள்..
எட்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய படம் தான் 'பிக் பி'. அமல் நீரத் இயக்கிய இந்தப்படம் மம்முட்டி நடித்த டான் வரிசை படங்களில் மிக முக்கியமானது. இந்தப்படத்தை கேரள மாநிலம் சேர்தலாவில் உள்ள பாரடைஸ் தியேட்டரில் மம்முட்டியின் பிறந்தநாளையொட்டி செப்-26ஆம் தேதி ரி-ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு காட்டவிருக்கின்றனர். இந்த நிகழ்விற்கு மம்முட்டியையும் அவரது மகன் துலகரையும் சேர்த்து அழைப்பதென்று முடிவு செய்துள்ளார்களாம் ரசிகர்கள்.