ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வீரம் படத்திற்கு மீண்டும் சிவா இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் அவரது 56வது படத்தில், சூரி பிரதான காமெடியனாக நடித்து வருகிறார். அந்த வகையில், படம் முழுக்க அவர்தான் அஜீத்துடன் வலம் வருகிறாராம். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அவரது காமெடிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக, இதற்கு முன்பு சூரியுடன் நடிக்காத அஜீத், தொடக்கத்தில் அவரது நடிப்பை கவனித்தாராம். அப்போது அதில் நல்ல நகைச்சுவை தெரிந்ததை அடுத்து, அவருக்கான காட்சிகளை இன்னும் மெருகேற்ற சொன்னாராம்.
அதையடுத்து, தனக்கென்று காமெடி காட்சிகள் மற்றும் வசனங்களை எழுத வைத்திருக்கும் காமெடி இலாகாவை அழைத்து அவ்வப்போது விவாதம் செய்து நடித்தாராம் சூரி. அப்படி அவர் நடித்த சில காட்சிகள் அஜீத்தை பெரிய அளவில் கவர, யூனிட்டுடன் சேர்ந்து அவரும் வாய்விட்டு சிரித்து ரசித்திருக்கிறார். இதனால் ஏற்கனவே அஜீத்துடன் முதன்முறையாக நடிப்பது உற்சாகமாக இருந்ததோடு, அவரே தனது காமெடியைப்பார்த்து கைதட்டி ரசிப்பது இன்னும் சூரிக்கு பெரிய எனர்ஜியாக அமைந்துள்ளதாம்.