ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்புதேவன் இயக்கிய இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்திற்கு பிறகு முழுநேர மலையாள நடிகையாகியிருந்த காதல் சந்தியா, அதன்பிறகு மிர்ச்சி சிவா நடித்த யா யா என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் கே.பாக்யராஜ், ஜெயராம் இணைந்து நடித்த துணை முதல்வர் படத்தில் நடித்த சந்தியா தற்போது கத்துக்குட்டி, சூதாட்டம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், தனது தாய்மொழியான மலையாளத்திலும் நான்கைந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இந்த படங்களை அடுத்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளாராம் சந்தியா. அதனால் தன்னை தேடிவரும் படங்களை திருப்பி விட்டு வரும் அவர், என் உடம்பு வெயிட் போட்டுக்கொண்டே இருக்கிறது. என்னால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப் போகிறேன் என்று கூறுகிறாராம். அதோடு, ஏற்கனவே சென்னை, கேரளாவில் பல இடங்களில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் காதல் சந்தியா, திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு பியூட்டி பார்லரில் முழுக்கவனம் செலுத்தப்போகிறாராம்.