ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நெருங்கிய நண்பனுக்கு பிறந்த நாள் என்றாலோ, அல்லது காதலிக்கு பிறந்த நாள் என்றாலோதான் நம்மவர்கள் அவர்கள் பிறந்த நாளின் முதல் வினாடியில் அதாவது சரியாக 12:00 மணிக்கு வாழ்த்து சொல்ல ஆசைப்படுவார்கள். சினிமாவில் இப்படிப்பட்ட காட்சிகளை பல படங்களில் பார்த்திருக்கிறோம். நம்முடைய நண்பர்களுக்கோ, காதலிக்கோ பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் போது கூட அந்த அளவிற்கு நொடி மாறாமல் நம்மால் வாழ்த்து சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும் சரியாக 12.00 மணிக்கு ஒருவர் மற்றொருவருக்கு வாழ்த்து சொன்னதை இன்று ஆதாரத்துடன் பார்க்க நேர்ந்தது.
நம் மனம் கவர்ந்தவர்களுக்கு மட்டுமே நாம் இப்படிப்பட்ட ஒரு வாழ்த்தைத் தெரிவிப்போம். அப்படி ஒரு வாழ்த்தை ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிம்பு இன்று தெரிவித்திருக்கிறார். இன்று 9ம் தேதி பிறக்கும் அந்த நள்ளிரவு 12 மணித்துளிகளில் சிம்பு, ஹன்சிகாவிற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், இனிமையான ஆண்டாக அமையட்டும், கடவுள் அருள் கிடைக்கட்டும்,” என சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். விடியற்காலை 5 மணிக்கு மேல் ஹன்சிகா அதற்கு 'நன்றி சிம்பு' என நன்றி தெரிவித்துள்ளார்.
சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக அறிவித்து, பின்னர் பிரிந்து விட்டார்கள். அதன் பின் 'வாலு' படத்திற்காக ஒரு பாடல் எடுக்க வேண்டி இருந்த நிலையில் மீண்டும் இணைந்து பணிபுரிந்தார்கள். இப்போது சிம்பு சரியாக 12 மணிக்கு வாழ்த்துச் சொல்லியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாழ்த்தில் இருப்பது, நட்பா, காதலா ?...சிம்புவுக்கே வெளிச்சம்.