இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
இதுவரை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறாரோ? என்று நினைத்து விடாதீர்கள் தலைப்பை பார்த்ததும். இந்த விஜய் இளைய தளபதி விஜய் இல்லை. இளைஞன் விஜய். அதாவது 80 வயது இளைஞர் முதல்வர் கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தின் உருவான இளைஞன் படத்தில் கதாநாயகனாக நடித்த பா.விஜய். தி.மு.க.வையும், அதன் தலைமை பீடத்தையும் நம்பி திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கி, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் பா.விஜய்.
தேர்தல் நெருங்குவதால், பிரசாரத்திற்கு பா.விஜய்யை பயன்படுத்திக் கொள்ளலாம் என உடன்பிறப்புக்கள் பலரும் யோசனை சொன்னதால், அதுபற்றி பரிசீலிக்க ஆரம்பித்திருக்கிறது தி.மு.க. தலைமை. ஆனால் கவிஞரோ... கழுவுற மீனில் நழுவுற மீன் போல நழுவுக்கொண்டே இருக்கிறாராம். எப்படி நழுவினாலும் கடைசியில் பிடிவாதம் தளரப்போவது மட்டும் நிச்சயம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.