ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கமல்ஹாசன் பற்றி நீண்டகாலமாகவே திரையுலகில் ஒரு விமர்சனம் உண்டு. அதாவது தன்னுடைய ராஜ்கமல் படநிறுவனத்தின் தயாரிப்பில் படம் எடுக்கும்போது, அப்படங்களை மீடியம் பட்ஜெட்டில் கமர்ஷியலான படங்களாக தயாரிப்பார். அதன் மூலம் செமத்தியாய் லாபம் சம்பாதிப்பார். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கும்போது அதை எக்ஸ்பரிமெண்டல் படமாக, அதாவது தனக்கு பெயர் கிடைக்கும்படியான கதைகளில் நடிப்பார். அப்படி தயாரிக்கப்பட்ட படங்கள் கமர்ஷியலாக வெற்றியடையாது. தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதே நேரம் கமலுக்கு மிகப்பெரிய பெயரைத் தேடிக் கொடுக்கும் என்பதே கமலைப்பற்றி சொல்லப்படும் விமர்சனம்.
இதில் முழு உண்மை இல்லை என்றாலும் ஓரளவு உண்மை என்று நடுநிலைவாதிகள் சொல்வார்கள். அதை உறுதிபடுத்துவதுபோல், தற்போது தான் நடிக்கும் தூங்காவனம் படத்தை 38 நாட்களில் எடுத்து முடித்துள்ளார் கமல்ஹாசன். கடந்த சில வாரங்களாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. கமல்ஹாசனின் உதவியாளர் ரமேஷ் எம்.செல்வா இயக்கி வரும் இப்படத்தில் பாடல்கள் கிடையதாம். ஒரேயொரு புரோமோஷன் சாங் மட்டும்தான்.
இப்படத்தில் கமல்ஹாசனுடன் பிரகாஷ் ராஜ், த்ரிஷா, பாபநாசம் புகழ் ஆஷா சரத் ஆகியோரும் நடித்துள்ளனர். தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் படங்களுக்கு இசை அமைத்து வரும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசை அமைப்பாளர். தமிழ், தெலுங்கு என் இரண்டு மொழிகளில் வெளியாகவிருக்கிறது தூங்காவனம்.