ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருடா திருடி படத்தில் மன்மதராசா பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியவர் சாயாசிங். அதற்கு முன்பே பல கன்னட படங்களில் நடித்திருந்த சாயாசிங் திருடா திருடி படத்தின் மூலம் தமிழ்நாட்டில் புகழ்பெற்றார். அதன் பிறகு அம்மா அப்பா செல்லம், கவிதை, அருள், ஜெயசூர்யா, வல்லமை தாராயோ படங்களில் நடித்தார். திருப்பாச்சி படத்தில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு நடனமாடினார். அவர் நடித்த சொல்லி அடிப்பேன் படம் வெளிவரவில்லை. அனந்தபுரத்து வீடு படத்தில் நடித்தபோது அதில் வில்லனாக நடித்த கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடைசியாக இது கதிர்வேலன் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் அண்ணியாக நடித்தார். நாகம்மா என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த சாயாசிங் தற்போது உள்குத்து படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் மார்கெட்டில் மீன் விற்கும் வியாபாரிகளை மையமாக வைத்து தயாராகும் இந்தப் படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இதில் அட்டக்கத்தி தினேஷ், நந்திதா ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் இயக்குகிறார். அந்த படத்தை தயாரித்த கென்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதில் சண்டை இயக்குனர் திலீப் சுப்பாராயன் வில்லனாக நடிக்கிறார். சமையற்கலை நிபுணர் தாமோதரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படிப்பிடிப்புகள் அடுத்த வாரம் முதல் நாகர்கோவிலில் தொடங்குகிறது. ஒரே கட்டமாக 45 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.