ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இதுவரை நம் சினிமாக்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை குணச்சித்திர நாயகனாகவே காட்டி வந்திருக்கின்றன. இவற்றில் ஹீரோ அர்ஜுனனாகவோ அல்லது கர்ணனாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு கடவுளாகவோ அல்லது பக்தனாகவோ தான் இருப்பார்கள். கிருஷணர் அவர்களுக்கு உதவும் ரோலில் தான் வருவார். ஆனால் இந்திய சினிமாவில் முதன்முறையாக கிருஷ்ணரை ஹீரோவாக்கி 'ஸ்யாமாந்தகம் ஒரு படம் உருவாக இருக்கிறது. அது மலையாளத்தில் உருவாவதும் அதில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிப்பதும் அதை 'பழசிராஜா' புகழ் ஹரிஹரன் இயக்குவதும் தான் ஹைலைட்.
சரித்திர படங்களில் நடிப்பது என்பது ஒரு நடிகருக்கு வேள்வி மாதிரி. ராம்சரணையும், பிரபாசையும் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். இப்போது பிருத்விராஜும் தன் பெயரை சரித்திரத்தில் நிலைநாட்டியே ஆகவேண்டும் என ஸ்ரீ கிருஷ்ணராக மாற தயாராகிவிட்டார். இதற்காக குதிரையேற்றம், மார்ஷியல் ஆர்ட்ஸ் உட்பட பல பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறாராம். மகாபாரத ஸ்ரீகிருஷ்ணரின் சொல்லப்படாத புது அவதாரம் ஒன்றை ரசிகர்களுக்கு விருந்தாக்க இருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன்.