ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எனக்கான ரசிகர்கள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறார்கள். அவர்கள் எனது படங்கள் எப்போது ரிலீசாகும் என்ற ஆர்வத்தில் இருப்பதை நான் உணர்கிறேன் என்ற சிம்பு அவ்வப்போது டுவிட் செய்து வருகிறார். ஆனால், அவருக்கென்று இப்போது பெரிதாக ரசிகர்கள் இல்லை என்பதே உண்மை.
இந்த நிலையில், தலயின் ரசிகரான சிம்பு, தனது வாலு படத்தை அவரது ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாகி விட்டது. சிம்புவின் வாலு படம் வெளியாவதற்கு விஜயே பேருதவி செய்திருக்கிறார். இதனால் விஜய் எனது உடன்பிறவாத அண்ணன் என்று டுவிட் செய்தார் சிம்பு.
அதையடுத்து, புலி ஆடியோ விழாவில் விஜய் பச்சைத்தமிழன், உண்மைத்தமிழன் என்றெல்லாம் ஏகத்துக்கு புகழ்ந்து தள்ளி அவரை திக்குமுக்காட வைத்திருக்கிறார் சிம்புவின் தந்தை டி.ஆர்., விளைவு, விஜய்யின் புலி படத்தை ஆதரிக்க தயாராவது போன்று இப்போது சிம்புவின் வாலு படத்தை ஆதரிக்கவும் விஜய் ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதனால், விஜய் எப்படி தனது படத்தை வெளியிட உதவி செய்கிறாரோ அதேபோன்று அவரது ரசிகர்களே தனது படத்தையும் வெற்றி பெறச்செய்து விடுவார்கள் என்று நம்பத் தொடங்கியிருக்கிறார் சிம்பு.