ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்த் திரையுலகில் இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் இமான். பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும், இயக்குனர்களுக்கும் தற்போது இசையமைத்து வருகிறார். ஆனால், இமான் இசையமைப்பை முதன் முதலில் அங்கீகரித்தது பிரபுதேவாதான் என்ற ஒரு தகவலை இன்று இமான் தெரிவித்தார். பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிக்கப்பட உள்ள மூன்று படங்களில் இரண்டு படங்களுக்கு இமான்தான் இசையமைப்பாளர். அந்தப் பெருமையுடன் இன்றைய அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசும் போதுதான் இமான் அந்தத் தகவலைத் தெரிவத்தார்.
“என்னை ஒரு இசையமைப்பாளரா முதல் முறையா அங்கீகரிச்ச ஒரு நடிகர் பிரபுதேவா சார். தமிழ்ல நான் இசையமைப்ப முதல் படம் 'காதலே சுவாசம்'. அந்தப் படம் இன்னும் ரிலீசாகலைங்கறது வேற கதை. ஆனால், அந்தப் படத்தோடு இயக்குனர் பிரபு நேபாள் சார் கூட சேர்ந்து நாரத கான சபா எதிர்ல இருக்கிற பிரபுதேவா சார் வீட்டுக்குப் போயி முதன் முதலா என்னோட டியூன்லாம் போட்டுக் காட்டினோம். அப்ப எனக்கு முதன் முதலா என்கரேஜ் பண்ணது பிரபுதேவா மாஸ்டர்தான். அதுதான் எனக்கு முதன் முதலா கிடைச்ச பாராட்டு. எனக்கே என் மேல நம்பிக்கை இல்லாத ஒரு நேரத்துல ஒரு பெரிய மாஸ்டரா இருக்கிற அவரு அன்னைக்கு ஆரம்பிச்சி வச்சாரு. இப்ப இந்த அளவுக்கு வந்து நின்னுக்கிட்டிருக்கேன். அதுக்கு பிரபுதேவா சாருக்கு ரொம்ப நன்றி. இப்ப அவர் முதன் முதலா தயாரிக்கிற மூன்று படங்கள்ல நான் இரண்டு படத்துக்கு இசையமைப்பாளர்ங்கறது இன்னொரு பெருமை,” என இமான் தெரிவித்தார்.
'ரோமியோ ஜுலியட்' படத்திற்குப் பிறகு இயக்குனர் லட்சுமண், ஜெயம் ரவி இணைய பிரபுதேவா தயாரிக்க உள்ள புதிய படத்திற்கும், இயக்குனர் விஜய்யின் உதவியாளர் விக்டர் இயக்க வருண் நடிக்க பிரபுதேவா தயாரிக்க உள்ள மற்றொரு படத்திற்கும் இமான் தான் இசையமைப்பாளர்.