ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் முதலானோர் நடித்துள்ள படம் - 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'. ஆர்யா தனது 'தி ஷோ பீப்புள்' நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தை VSOP என பிரபலமான மதுவின் பிராண்ட் பெயரிலேயே குறிப்பிட்டு வருகின்றனர். அது மட்டுமல்ல, இப்படத்தில் சரக்கடிக்கும் காட்சிகளும், வசனங்களும் அதிகமாக இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை இம்மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படம் தணிக்கைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. VSOP படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர், அப்படத்தில் இடம்பெற்றுள்ள சரக்கு, சைட் டிஷ்களுக்கு கட் கொடுப்பார்கள் என்று பார்த்தால்..... 'VSOP' படத்தை குழந்தைகுட்டிகளுடன் போய்ப் பாருங்கள் என்று சொல்வதுபோல் அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்று 'யு' சர்ட்டிஃபிகேட் வழங்கி உள்ளனர். இதனால் 'VSOP' படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஆர்யா மிக மகிழ்ச்சியில் இருக்கிறார்.
தனது 25 ஆவது படத்துக்கு சென்சாரில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்பதே அவரது மகிழ்ச்சிக்கு காரணமாம். 'VSOP' படத்துக்கு தணிக்கையில் 'யு' சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்டதால், வரிவிலக்கு கிடைப்பதும் சுலபமாகி இருக்கிறது.