சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாம்பு சட்டை படத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், ஷிவானி உள்பட பலர் நடித்துள்ளனர். வில்லனே இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒருவன் எப்படியெல்லாம் நல்லவனாக, கெட்டவனாக மாறுகிறான் என்ற கதை அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது.
ஆதம் தாஸ் இயக்கும் இந்த படத்திற்கு அஜீஸ் அசோக் இசையமைத்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் பாடகர். 2013ல் சிறந்த பாடகர்களை தேர்வு செய்யும் நீதிபதியாக சென்ற யுவன்ஷங்கர் ராஜா, இந்த அஜீஸை சிறந்த மெலோடி பாடகராக தேர்வு செய்தார். அதோடு தனது இசையில் பாடவும் அவருக்கு வாய்ப்பளித்தார்.
அந்தவகையில், கோவா படத்துக்காக ஆண்ட்ரியாவுடன் இணைந்து இதுவரை இல்லாத -என்று தொடங்கும் பாடலை பாடினார் அஜீஸ் அசோக். அதையடுத்து சுமார் பத்து திரைப்படங்களில் பாடியிருக்கும் அவர், தற்போது பாம்பு சட்டை படத்தில் இசையமைப்பாளராகியிருக்கிறார். அதோடு, தன்னைப்போலவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட சில பாடகர்- பாடகிகளையும் இந்த படத்தில் பாட வைத்துள்ளார் அஜீஸ் அசோக்.