ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி ஆகிறார் நடிகை இஷா கோபிகர். அன்கர் பாத்யா இயக்கும் அஷி நபே ப்யூர் சா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிப்பது பற்றி இஷா கோபிகர் கூறியுள்ளதாவது... இந்தப்படத்தை நான் தேர்வு செய்ய காரணமே, அருமையான கதை தான். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பல கதைகளை கேட்டு வந்தேன், ஆனால் எதுவுமே பிடிக்கவில்லை. இந்தப்படத்தை நான் தேர்வு செய்ய குறிப்பிட்ட வேறு காரணம் எதுவும் கிடையாது. இயக்குநர் கதை சொன்ன விதமும், படத்தின் கதையும் தான் என்று கூறியுள்ளார்.
இஷா கோபிகர் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு, ராம் கோபால் வர்மா இயக்கிய சபரி என்ற படத்தில் நடித்தார்.