ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்றைய இளம் ரசிகர்களுக்கு சிவகாசி, அழகிய தமிழ் மகன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமண்யம் படங்களில் விஜய், ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமானவர்தான் சீனியர் நடிகையான கீதா.. 1978ல் பைரவி படத்தில் ரஜினியின் தங்கையாக அறிமுகமான நாளில் இருந்தே மிகவும் ராசியான நடிகையாகிவிட்டார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும், நான்கு மொழிகளிலும் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட கீதா, ஹிந்தியிலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு பின்னர் திரையுலகிற்கு வந்த நடிகைகள் எல்லாம் வெள்ளித்திரையில் ரிடையர்டு ஆகி சின்னத்திரையில் தஞ்சம் புகுந்தாலும் கூட கீதா மட்டும் டிவி சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்தார், அதற்கேற்ற மாதிரி பட வாய்ப்புகளும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இப்போது லேட்டஸ்ட் தகவலாக மலையாள சேனல் ஒன்றில் தயாராகும் சீரியலில் நடிக்க இருக்கிறார் கீதா. இவருக்கேர்ற வலுவான கதாபாத்திரத்துடன் சீரியல் வாய்ப்பு தேடிவந்ததலும், வயதாவதால் அலுங்காமல் நடித்துவிட்டு போகலாமே என்றும் சின்னத்திரைக்குள் நுழைந்துள்ளாராம் கீதா.