ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கும்மாளம் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'சர்வம்', 'பில்லா', 'ஆரம்பம்' ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி ஆகியோரை வைத்து விஷ்ணுவர்தன் தற்போது இயக்கி வரும் படம் - 'யட்சன்'. இரட்டை எழுத்தாளர்களான சுபா பிரபல பத்திரிகை ஒன்றில் எழுதிய தொடர்கதையையே படமாக்கி உள்ளார் விஷ்ணுவர்தன். இப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது. யட்சன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
கும்மாளம் படம் தொடங்கி விஷ்ணுவர்தன் இயக்கிய அனைத்து படங்களுக்குமே யுவன்சங்கர்ராஜாதான் இசையமைப்பாளர். இதற்கு யட்சன் படமும் விதிவிலக்கில்லை. இவர்கள் இருவரும் இணைந்த 'அறிந்தும் அறியாமலும்', 'பில்லா', 'சர்வம்', 'ஆரம்பம்' உட்பட அனைத்து படங்களின் பாடல்களும் ஹிட்டாகி உள்ளன. அந்த வரிசையில் 'யட்சன்' படப் பாடல்களையும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துவரும்நிலையில், 'யட்சன்' படப் பாடல்களை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி புலி படத்தின் இசைவெளியீடு நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த நாளே யட்சன் இசைவெளியீட்டையும் நடத்தினால் எடுபடாமல் போய்விடுமோ என தயாரிப்பாளர் தரப்பில் தயக்கமும் நிலவுவதாக சொல்லப்படுகிறது. யட்சன் இசைவெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா? பார்ப்போம்..!