கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
கடந்த வருடம் ஜூலை மாதம் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்டார் - தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து மதனுக்கு பல கோடிகளை லாபமாகக் கொடுத்தது. அடுத்து காக்கி சட்டை படத்தையும் வாங்கி வெளியிட்டார். அதுவும் லாபம் தந்தது. தன்னுடைய பேனரில் தயாரித்த கயல் படம் பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்த, விநியோகம் செய்த படங்கள் லாபம் கொடுத்தன. எனவே பட விநியோகத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார் மதன்.
உப்புக்கருவாடு, சவாரி ஆகிய படங்களை வெளியிட ஒப்பந்தம்போட்டுள்ள மதன் தற்போது 'பாயும்புலி' படத்தின் தமிழக உரிமையை வாங்கி உள்ளார். 'பாண்டியநாடு' படத்திற்குப் பிறகு விஷாலும், இயக்குநர் சுசீந்திரனும் 'பாயும்புலி'யில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள் . படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. டி.இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தின் சிங்கிள் டிராக்கான சிலுக்கு மரமே பாடல் சமீபத்தில் வெளியானது.
'பாயும் புலி' படத்தின் இசை ஆகஸ்ட் 2ல் வெளியாகவிருக்கிறது. 'வெடி' படத்திற்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் போலீஸாக நடித்திருக்கிறார் விஷால். அதுவும் 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்'. இப்படத்தில் காமெடியன் சூரி கான்ஸ்டபிளாக நடித்திருக்கிறார். விஷால் போலீஸ் அதிகாரி என்பது படத்தின் இடைவேளைக்குப் பிறகே தெரிய வருமாம். இப்படத்தில் முதல்முறையாக விஷாலுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் காஜல் அகர்வால். காஜல் அகர்வாலை காதலிக்கும் விஷால் அவரை செல்லமாக 'முயல்குட்டி' என்று அழைப்பாராம். எனவே 'முயல்குட்டி' வார்த்தையை பாடல் ஒன்றிலும் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.