கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால், மக்கள் ஜனாதிபதி என, அன்புடன் அழைக்கப்பட்டவரும், இளைய தலைமுறையினரிடையே, கனவு காணுங்கள் என்ற தன்னம்பிக்கையை விதைத்து, அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டியவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மறைவைக்கு நாடே கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறது. திரைபிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். டுவிட்டரில் திரை பிரபலங்கள் தெரிவித்த சில இரங்கல்கள்...
பி.சி.ஸ்ரீராம்
இந்தியாவின் உண்மையான ஹீரோ நம்மோடு இல்லை. எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற பலருக்கு அவர் தான் முன்மாதிரி, அவரது ஆன்மா சாந்தியடைட்டும் என்று கூறியுள்ளார்.
தனுஷ்
நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு, இந்த செய்தியை மிகப் பயங்கரமாக உணருகிறேன்.
சிவகார்த்திகேயன்
கோடிக்கணக்கான மக்களின் முன்னோடியாக திகழ்ந்த ஏவுகணை நாயகனே அமைதியாக ஓய்வு எடுங்கள்.
ஆர்யா
தனது உழைப்பால் கோடிக்கணக்கான மக்களின் முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர்.கலாம். நீங்கள் யாருக்காவது முன்னோடியாக இருக்க விரும்பினால் அவரைப்போன்று கடுமையாக உழையுங்கள்.
விஷால்
அப்துல் கலாம் அவர்கள் இப்போது நம்மோடு இல்லை. நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு. நீங்கள் தான் என்னுடைய முன்மாதிரி. உங்களது ஆத்மா சாந்தியடையட்டும்.
சூர்யா
பிறப்பு ஒரு மனிதனை அடையாளப்படுத்தாது, அவனது எண்ணமும், உழைப்பும், தொலைநோக்கு பார்வையும் தான் அவனை அடையாளம் காட்டும் என்பதை நீங்கள் நிரூப்பித்துள்ளீர்கள். சாதாரண பேப்பர் போடும் பையனாக இருந்து, நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்துள்ளீர்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.
ஜி.வி.பிரகாஷ்
இந்தியர்களின் முன்மாதிரியாக இருந்த அப்துல் கலாம் அவர்கள் இப்போது இல்லை. ஒரு புதையல் தொலைந்தது. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
சுசீந்திரன்
கலாமின் மறைவு நம் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு.