கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் பிரபலங்களும் இரங்கற் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ( கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் நண்பி) அப்துல் கலாம் மறைவு குறித்து, டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுஷ்கா சர்மா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது., ஏபிஜே கலாம் ஆசாத்தின் மறைவு செய்தி தன்னை மிகுந்த துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. சிறந்த மனிதரை இழந்துவிட்டோம். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது டுவிட்டர் பாலோயர்கள், தவறை சுட்டிக்காட்டினர். உடனே, அந்த டுவிட்டை டெலீட் செய்த அனுஷ்கா சர்மா, அடுத்ததாக, மறுபடியும்
ஏபிஜே கலாம் ஆசாத்திற்காக வேண்டிக்கொள்கிறேன் என்று பிரார்த்தித்துக்கொள்கிறேன் என்று டுவிட் போட்டார்.
இந்த டுவிட்டிலும், பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதை, அவரது பாலோயர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து
ஏபிஜே அப்துல் கலாமின் மறைவு செய்தி தன்னை மிகுந்த துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. சிறந்த மனிதரை இழந்துவிட்டோம். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று சரியாக டுவிட் செய்தார்.