கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
2002-ல் வெளிவந்த 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். கடந்த 13 ஆண்டுகளில் தமிழ் தவிர இரண்டு ஹிந்தி படங்கள், ஒரு மலையாள படம் (கெஸ்ட் ரோல்) உட்பட சுமார் 35 படங்களில் நடித்து, தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்று சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார் தனுஷ்! கொலவெறி பாடல் வெளியான பிறகு, இந்திய அளவில் அறியப்படும் நடிகராக வளர்ந்தார். அமிதாப் உடன் இணைந்து ஷமிதாப் ஹிந்திப்படத்தில் நடித்த பிறகு மேலும் புகர் பெற்றார். சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என வேறு பல முகங்களுடன் சினிமாவில் பயணிக்கும் நடிகராக இருக்கிறார் தனுஷ்.
சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியான 'காக்கா முட்டை' மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தின் வெற்றியுடன் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி படமும் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்வெற்றியினால் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் தனுஷுக்கு இன்று 33 ஆவது பிறந்த நாள்!
சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளியில்தான் படித்தார் தனுஷ். தன் பிறந்தநாளை முன்னிட்டு, தன்னுடன் படித்த நண்பர்களை ஒவ்வொரு வருடமும் சந்திப்பார். இந்த வருடமும் நண்பர்களை சந்திப்பதற்காகவே சாலிகிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அங்கு தன் பள்ளித்தோழர்களை சந்திக்கிறார் தனுஷ்.