கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
முன்னாள் ஜனாதிபதி, மக்களின் தலைவர், மாணவர்களின் விடிவௌ்ளி... அப்துல் கலாமின் மறைவிற்கு நாடே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
அப்துல் கலாமின் மறைவிற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவர்கள் சார்பில் ஒரு இரங்கல் அறிக்கையும் வௌியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது...
இந்திய நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்து இவரால் அந்தப்பதவிக்கு பெருமை சேர்த்த இளைஞர்களின் கனவு நாயகன் அப்துல் கலாமின் மறைவு, தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஒரு பேரிழப்பாகும்.
ராமேஸ்வரத்தில் அவதரித்து அகிலமெல்லாம் பயணித்து, மனித உயிரின் மேன்மையையும், அணு உலகில் அதிசயத்தையும், மரங்களின் தேவையையும், மனித நேயத்தையும், வருங்கால இந்தியாவின் தூண்களான மாணவ சமுதயாத்தின் வழிகாட்டியாகவும், நீக்கமற நிறைந்து தமது அனுபவத்தையும், ஆற்றலையும், பகிர்ந்தளித்து வந்த கலாம் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஓய்வறியாமல் உழைத்து வந்த அந்த மகான் ஓய்வெடுக்கச் சென்றதுபோல் அவரின் மரணம், அனைவரின் மனதிலும் ஒரு அதிர்வலையை உண்டாக்கி உள்ளது. அவரின் நல்ல எண்ணங்களையும், அவரின் 2020 ஆண்டு கனவினையும் செயல்படுத்துவதே நமது தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு நாம் செயல்படுவதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். அவரின் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீரால் அஞ்சலி செலுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.