யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்! | சூர்யா 46வது படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா? | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - வெள்ளிவிழா ஆண்டில் ரீரிலீஸ் அறிவிப்பு | பிளாஷ்பேக்: இயக்குநர் பி ஆர் பந்துலுவின் 'டூப்'பாக சாண்டோ சின்னப்ப தேவர் நடித்த “திலோத்தமா” |
பாகுபலி படம், மிகப்பெரிய பட்ஜெட் படம், வசூலில் இமாலய சாதனை என ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க.....தனுஷ் நடித்துள்ள "மாரி" படம் வெளியான மறுநாளிலேயே சக்சஸ் மீட், மாரி படக்குழுவினருக்கு, தனுஷ் தங்கச்சங்கிலி பரிசு என்று மறுபக்கம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்க... கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "பாபநாசம் படம் சத்தமில்லாமல், 25 நாட்களை நிறைவு செய்துள்ளது.
தற்போதைய நிலையில், வெளியாகும் படங்கள் 7 நாட்கள் ஓடினாலே பெரிய விஷயமாக உள்ளது. இந்நிலையில், 25 நாட்களாக, தொடர்ந்து மக்களின் உற்சாக வரவேற்பில், பாபநாசம் படம், திரையிடப்பட்ட தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மலையாளத்தில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக் படம் என்றாலும், கமல், தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததே, படம் சத்தமில்லாமல், 25 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக திரைவிமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் நடிப்பில், விரைவில் தூங்காவனம், விஸ்வரூபம் 2 படங்கள் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.